உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பல்டி

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பல்டி

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பல்டி அடித்தார்.விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறையில் உள்ள அரசு செம்மண் குவாரியை, கடந்த தி.மு.க., ஆட்சியின்போது ஏலம் எடுத்து, அதில், விதிமீறி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி அளவில் இழப்பை ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது, கடந்த 2012-ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 34 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், அதில் 27 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, ராஜம கேந்திரன், கோபிநாத் ஆஜராகவில்லை. அரசு தரப்பு சாட்சியாக, ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் கோவில்மணி ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர், ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, உயர் அதிகாரிகள் கூறியதால் கோப்பில் கையெழுத்திட்டேன், எனக்கு எதுவும் தெரியாது எனக்கூறி, அரசுக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்தார். விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

S Hariharasubramanian
ஜூலை 10, 2024 13:34

எப்போ தான் இந்த கேஸ் முடியும்.


Vijay D Ratnam
ஜூலை 09, 2024 22:09

இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மேலே இருப்பவனிடம் ஆல்ரெடி டீலிங் முடிஞ்சி. இந்திய கிரிக்கெட் போர்ட் ஆப் கண்ட்ரோல் செயலாளர் அமித்ஷாவின் மவன் ஜெய்ஷாவும், தமிழ்நாடு கிரிக்கெட் அசோஸியேஷன் முன்னாள் தலைவரும் ஜாமினில் வெளியே இருக்கும் மந்திரி பொன்முடி மவன் அசோக் சிகாமணியும் திக் பிரெண்ட்ஸ் ஆச்சே.


Kasimani Baskaran
ஜூலை 09, 2024 22:07

மேல் அதிகாரி சொன்னவுடன் கழுதைக்கு காலே கிடையாது, பாம்பு போல ஊர்ந்துதான் போகிறது என்று கூட சொல்லத்தயங்காத அதிகாரிகள் தமிழகத்தில் இருப்பது ஒன்றும் புதிதல்ல. இது போன்ற வேலை செய்யத்தெரியாத அதிகாரிகளை நிரந்தரமாக பணிநீக்கம் செய்யலாம். வெட்டியாக எதற்கு பொது மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்பட வேண்டும்? இதை நீதித்துறை பொது நல வழக்காக தானே முன்வந்து பதிவு செய்ய வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 09, 2024 21:58

சூனாபானா பஞ்சாயத்தே தேவலாம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 09, 2024 21:52

நீதிமன்றங்களின் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளனர் ... இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல .....


Ashanmugam
ஜூலை 09, 2024 21:13

பொன்முடி வழக்கு ஓர் பழம்கஞ்சி. இனி இந்த வழக்கும் நேர்மை நீதிமான் வெங்கடேஷ் அளித்த ஜெயில் தண்டணை அபராதம் எல்லாம் இனி தவிடு பொடிதான். வீணாக வழக்கு விசாரணை தமிழக மக்களை மூலை சலவை செய்ய விசாரணை வாய்தா வாய்தா என இழுத்தடிக்கும்.


sankaranarayanan
ஜூலை 09, 2024 20:50

உச்ச நீதி மன்றம் என்ன சொல்லப்போகிறது ஜாமீனை ரத்து செய்யுமா பதவியை பறிக்குமா பார்க்கலாம் பொறுத்திருந்து


SUBBU,MADURAI
ஜூலை 09, 2024 20:23

மூன்று வருட சிறை தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்காமல் உடனே தண்டனையை நினைவேற்றி இருந்தால் இது யோன்ற சாட்சி பிறள் சாட்சியாக அவலம் நடந்தேறி இருக்குமா? முதலில் நமது நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை மறுபறுசீலனை பண்ண வேண்டும். இது நீதிமன்றங்களின் மீது பாமர மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக் குறியாக்கி உள்ளது.இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல


GMM
ஜூலை 09, 2024 19:45

உண்மை பெரிதா? உயிர் பெரிதா?


Palanisamy Sekar
ஜூலை 09, 2024 19:36

ஆளுநருக்கே செக் வைத்த பொன்முடி.. மந்திரி பதவி இருக்குது, கொழுத்த பணம் இருக்குது, அதிகாரமும் சேர்ந்தே இருக்கும்போது சாட்சிகளை அந்தர்பல்டி அடிக்க வைக்கலாம், ஆகாயத்தில் கூட பல்டி அடிக்க வைக்கலாம். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் எடப்பாடி அவர்கள் என்ன செய்தார்? இந்த வழக்கின் விசாரணையை இங்கே நடத்த கூடாது என்று சொல்லியிருக்கணுமே, ஏன் சொல்லவில்லை? அம்மா ஜெ அவர்கள் வழக்கு விசாரணையை தள்ளிக்கொண்டு கர்நாடகா போகவைத்தார்களே.. இங்கே இவர் மந்திரியாக இருக்கும் வரை ஆடுவார் நரக ஆட்டம் ஆடுவார். என்னத்த சொல்ல, எல்லாமே அதிகாரவர்க்கங்களுக்குத்தான் இந்த மாநிலத்தில். கட்டுப்ப்டுத்த சட்டமும் இல்லை, இருட்டறையில் தூங்குகின்றது சட்டங்கள்.. கீழ் முதல் உச்சம் வரை எல்லாமே பணத்துக்குத்தான்.


மேலும் செய்திகள்