உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 6 ஆடுகளை திருடிய பல ஆசாமி கைது

6 ஆடுகளை திருடிய பல ஆசாமி கைது

கண்டமங்கலம் : விழுப்புரம் அடுத்த கண்டமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்,52; இவர், நான்கு வழிச்சாலையில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். இப்பண்ணையில் 2 நாட்களுக்கு முன் 6 ஆடுகள் திருடு போனது. இந்நிலையில் மறுநாள் இறைச்சி கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் பைக்கில், ஆறுமுகம் பண்ணையில் இருந்து திருடிய கொம்பில் நீல வர்ணம் அடித்த ஆட்டை கொண்டு சென்றது தெரிய வந்தது. அவரைப் பிடித்து, விசாரித்ததில், பண்ணக்குப்பத்தைச் சேர்ந்த உதயசூரியன் மகன் சுகுராஜ், 35; என்பவரிடம் வாங்கி வந்ததாக தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, சுகுராஜை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி