உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கடையில் பணம் திருட்டு : மர்ம ஆசாமிக்கு வலை

 கடையில் பணம் திருட்டு : மர்ம ஆசாமிக்கு வலை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மளிகைக் கடையில் பூட்டை உடைத்து பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். விக்கிரவாண்டி அடுத்த அசோகபுரியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம், 36; மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது மளிகை கடையில் இரும்பு கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே டேபிளில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் திருடு போனது. நித்தியானந்தம் அளித்த புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி