உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணி வளவனுாரில் ஆய்வு

 எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணி வளவனுாரில் ஆய்வு

விழுப்புரம்: வளவனுார் பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். வளவனுார் பேரூராட்சி வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் தெரு, பஜார் வீதி உட்பட பல்வேறு வார்டுகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பட்டியல் நடக்கிறது. இந்த பணிகளை ஓட்டுச்சாவடி முகவர்கள் மூலம் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஓட்டுச்சாவடி முகவர்களோடு ஆலோசனை நடத்தி, ஒரு வாக்காளர் கூட விடுபடாமல் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், வளவனுார் பேரூராட்சி செயலாளர் ஜீவா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சம்பத், வழக்கறிஞர் சுரேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாதன். அவை தலைவர் சரபோஜி, பொருளாளர் ரகுமான், துணை தலைவர் அசோக், துணை செயலாளர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ