| ADDED : ஜன 14, 2024 04:55 AM
விழுப்புரம் : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு திறன் மேம்பாட்டு பயற்சி வழங்கப்பட உள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பட்டய படிப்பு, பொறியியல் பட்ட படிப்பில் மெக்கானிக்கல் புரொடெக் ஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், என்.டி.டி.எப்., இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்போடு தொழில்துறை சார்ந்த பயிற்சி மற்றும் எண் முறை உற்பத்தி துறையில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இந்த பயிற்சியில் சேர 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி 6 மாத காலம் அளிக்கப்படுகிறது. மேலும், தங்கி பயிலும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றும் வழங்கப்படுகிறது.பயிற்சியை முடித்தால், துவக்க கால மாதாந்திர ஊதியம் பட்டயபடிப்பு முடித்தோருக்கு 16 ஆயிரம் முதல் 21 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.பொறியியல் பட்டப்படிப்பு முடித்தோருக்கு 21 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.மேலும், தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயிற்சியை www.tahdco.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.