மேலும் செய்திகள்
இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொன்ற மகன்
25-Sep-2025
திண்டிவனம்: திண்டிவனம் அருகே, தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர். வெள்ளிமேடுப்பேட்டை, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மண்ணுபெருமாள், 46; இவரது மகன் சேதுராமன், 21; இவர் மீது திருட்டு வழக்கு உள்ளது. மேலும் ஆந்திராவில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது அவரது தந்தை ஒரு சவரன் நகையை அடகு வைத்து அவரை சிறையில் இருந்து மீட்க செலவு செய்தார். இதையடுத்து சிறையை விட்டு வெளியே வந்த சேதுராமன், நேற்று மாலை அடகு வைத்த செயினை திருப்பி தருமாறு கேட்டு, தந்தையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மண்ணுபெருமாள் கொடுத்த புகாரின் பேரில், வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் சேதுராமனை கைது செய்தனர்.
25-Sep-2025