உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தெற்கு மாவட்ட தி.மு.க., அண்ணா அறிவகம் திறப்பு: மாவட்ட பொறுப்பாளர் தகவல்

தெற்கு மாவட்ட தி.மு.க., அண்ணா அறிவகம் திறப்பு: மாவட்ட பொறுப்பாளர் தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அண்ணா அறிவகம் திறப்பு விழா திருக்கோவிலுாரில் இன்று நடக்கிறது. விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதமசிகாமணி அறிக்கை: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அண்ணா அறிவகம் திறப்பு விழா இன்று 26ம் தேதி மாலை 4:30 மணிக்கு திருக்கோவிலுார் செவலை சாலையில் உள்ள ராசாத்தி பில்டிங்கில் (சீனிவாசா தியேட்டர் எதிரே) நடக்கிறது. எனது தலைமையில், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்கள் சுரேஷ் செல்வராஜ், தமிழ்மாறன் முன்னிலை வகிக்கின்றனர். பொன்முடி எம்.எல்.ஏ., அண்ணா அறிவகத்தை திறந்து வைக்கிறார். அன்னியூர் சி வா எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், தொகுதி பார்வையாளர்கள் கார்த்திகேயன், ஜெயராஜ், தலைமைக் கழக வழக்கறிஞர் சுரேஷ், மகளிரணி பிரசாரகுழு செயலாளர் தேன்மொழி உட்பட ஒன்றிய, நகர, பேரூரராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அணி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை