மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள்
08-Dec-2024
விழுப்புரம்: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத, அடையாள அட்டை இல்லாத 100 மாற்றுத்திறனாளிகள் நேற்று அழைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. 52 பேர் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு பரிசோதனைகள் செய்து 28 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்று மற்றும் யு.டி.ஐ.டி., பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, மருத்துவ குழு பேச்சு பயிற்சியாளர் அபிசேகா, பல்நோக்கு உதவியாளர் நெல்சன், செயல்திறன் உதவியாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
08-Dec-2024