உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

 வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., கோலியனுார் மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் நடந்த புதிய வாக்காளர்கள் சேர்த்தலுக்கான சிறப்பு முகாமை, மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு செய்தார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க.,விற்குட்பட்ட கோலியனுார் மேற்கு ஒன்றியம், விராட்டிக்குப்பம் ஊராட்சியில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் நேற்று புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நடந்தது. இங்கு, பூத் எண்.187ல் நடந்த சிறப்பு முகாமை, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி ஆய்வு செய்தார். ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, அவைத் தலைவர் ஆவின் தண்டபாணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சதீஷ், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அசோக் சதாசிவம் உட்பட ஓட்டுச்சாவடி முகவர்கள், பாகநிலை முகவர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ