உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு

 மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் வரும் 27, 28 ம் தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில், வரும் ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கடந்த 19 ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், வாக்காளர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை சம்பந்தபட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களிலும், ஓட்டுச்சாவடி மையங்களில் வரும் ஜன., 18 ம் தேதி வரை வழங்கலாம். விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 2,166 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 1,138 ஓட்டுச்சாவடி அமைவிடங்களில் வரும் 27, 28 ம் தேதிகளிலும், வரும் ஜன., 3,4ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்த தகுதியான வாக்காளர்கள் தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் தேவைப்படும் வாக்காளர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இடம் பெறாமல் உள்ள தகுதியான வாக்காளர் அனைவரும் தங்கள் கோரிக்கை மனுக்களை தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு சென்று தகுந்த படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் அளிக்கலாம். மேலும், வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (https://voters.eci.gov.in/) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை