| ADDED : ஜன 22, 2024 12:34 AM
விழுப்புரம், - விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தில் ஊராட்சி தலைவர்கள் மூலம் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.இதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி, செலவினம் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் இந்த நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல், துாய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் தொடர்பான விபரங்கள் வைக்கப்படவுள்ளன.பொதுமக்கள் கூட்டத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.