உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.முகாமை மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். டாக்டர் சுகுமாறன் முன்னிலை வகித்தார். கைத்தறி சங்க செயலாட்சியர் கபிலன் வரவேற்றார். முகாமில் கண்டாச்சிபுரம் பகுதி கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து வழங்கப்பட்டது. முகையூர் வட்டார மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். ஏராளமான நெசவாளர்கள் பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை