கோவில்களில் சிறப்பு வழிபாடு
செஞ்சி: செஞ்சியில் உள்ள கோவில்களில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாத வினியோகமும் நடந்தது. பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேசபெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.இதையடுத்து தங்க கவச அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வினியோகம் செய்தனர். செஞ்சி கோட்டை வெங்கரட்ரமணர் கோவிலில் சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் பஜனையும், பக்தர்களுக்கு பிரசாத வினியோகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டன ர்.