உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் கல்லுாரியில் விளையாட்டு போட்டி

மயிலம் கல்லுாரியில் விளையாட்டு போட்டி

மயிலம் : மயிலம் எஸ்.எஸ்.பி.எஸ்., தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி துவங்கியது. மயிலம் பொம்மபுர ஆதீனம், 19வது பட்ட சுவாமிகளின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாளைய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான விளையாட்டு துவக்க விழா நடந்தது. மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் ஆசி உரை வழங்கினார். மயிலம் கல்லுாரி செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட கூடுதல் எஸ்.பி., இளமுருகன் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மயிலம் தமிழ் கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் மயிலம் தமிழ் கல்லுாரி துறை தலைவர்கள் உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குனர் நாராயணசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை