உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ராஜா தேசிங்கு பள்ளியில் விளையாட்டு விழா

 ராஜா தேசிங்கு பள்ளியில் விளையாட்டு விழா

செஞ்சி: செஞ்சி அடுத்த களையூர் - நாட்டார்மங்கலம் ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியில் 13வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. அறக்கட்டளைத் தலைவர் பாபு தலைமை தாங்கி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி, போட்டிகளை துவக்கி வைத்தார். செயலாளர் அய்யப்பன், பொருளா ளர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். பாலிடெக்னிக் முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். விழாவில், கபடி, ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், கூடைபந்து, இறகு பந்து உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் அருள் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை