மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
25-Jul-2025
செஞ்சி, ; நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் குமரவேல் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் இல்லம் தேடி மருத்துவ பயனாளிகளுக்கு மருந்து தொகுப்பு பெட்டி வழங்கினார். ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், வட்டார மருத்துவ அலுவலர் யோகப்பிரியா, மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்திபன், ஒன்றிய கவுன்சிலர் முரளி, கமலா, நிர்வாகிகள் சிவப்பிரகாசம், கதிரவன், வாசு, சுதா பாஸ்கர் மற்றும் ஊராட்சி தலைவர்கள், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
25-Jul-2025