உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான கருத்தரங்கு

மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாநில அளவிலான கருத்தரங்கு

விழுப்புரம் : மயிலம் பொறியியில் கல்லுாரியில் வேதியியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கிற்கு மயிலம் கல்விக்குழுமம் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜப்பன் வரவேற்றார். இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார்.மகராஷ்டிரா மாநிலம் பூனாவை சேர்ந்த உயிரணு அறிவியலுக்கான தேசிய மையத்தில் பணிபுரியும் ஆராயச்சியாளர் இலக்கியா, இயந்திர கற்றல் அணுகுமுறை மூலம் பெப்டைட்களை குறிவைக்கும் டெங்கு வைரஸ் தன்மை, கணிப்பு பற்றி விளக்கமளித்தார். தஞ்சாவூரை சேர்ந்த சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி விஞ்ஞானி கிருஷ்ணகாந்த் குப்தா, மதுரை அமெரிக்கன் கல்லுாரி உதவி பேராசிரியர் கிரிஸ்டோப்பர் ஜெயக்குமார் பேசினர்.இந்த நிகழ்ச்சியில், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உட்பட மாணவ, மாணவிகள் மற்றும் பிற கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வேதியியல் துறை தலைவர் கவிதபிரியா, உதவி பேராசிரியர் சங்கீதா ஆகியோர் செய்தனர். பேராசிரியை ராகவர்ஷினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை