மேலும் செய்திகள்
ஹோலி ஏஞ்சல் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா
24-Aug-2024
மயிலம், : மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவர் தலைவர் தேர்தல் நடந்தது.நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர் தலைவர், தலைவி மற்றும் விளையாட்டு துறை தலைவர், தலைவிக்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ தலைவர்களுக்கான பதவி ஏற்பு விழா விழா நடந்தது. பழனியப்பன் தலைமை தாங்கினார். முதல்வர் அகிலா முன்னிலை வகித்தார். முதல்வர் எரோமியாஸ் பிஸ்கோ வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக திண்டிவனம் முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜாராம், இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து நான்கு அணிகளுக்குரிய கொடியையும் அறிமுகம் செய்தனர்.ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
24-Aug-2024