உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிலம்பத்தில் மாணவர்கள் கின்னஸ் சாதனை

சிலம்பத்தில் மாணவர்கள் கின்னஸ் சாதனை

விக்கிரவாண்டி; சிலம்பம் விளையாட்டில் கின்னஸ் நிகழ்ச்சியில் அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். திருநெல்வேலியில் நெடுவயலுார் வார் பார் சிலம்பம் மற்றும் தென்காசி குருகுலம் சித்ராஜித் சிலம்பம் இணைந்து கின்னஸ் சாதனைக்காக சிலம்பம் சுற்றும் போட்டி நடத்தினர். கடந்த 4ம் தேதி நடந்த இப்போட்டியில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, பனையபுரம் சஞ்சய் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் துளிர் சிறப்பு பள்ளி சார்பில், பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ரஞ்சித் குமார், 14; முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கோகுல், 14; அப்பு சிவபாலன், 12; அப்பு சிவா கவுசிக், 9; பாப்பனப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி மாணவர் ஸ்ரீமன், 12; விழுப்புரம், அண்ணா பொறியியல் கல்லுாரி மாணவர் பயிற்சியாளர் சஞ்சய், 19; என 6 பேர் பங்கேற்றனர். இவர்கள், தொடர்ந்து 2 மணி நேரம் 25 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை படைத்தனர். இவர்களுக்கு நிகழ்ச்சியாளர்கள் விருது, சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். சாதனை படைத்த மாணவர்களை பயிற்சியாளர் சஞ்சய், துளிர் சிறப்பு பள்ளி நிறுவனர் வடிவேலு, தாளாளர் தனலட்சுமி, சிறப்பு ஆசிரியர் முத்துகிருஷ்ணன் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி