உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சார் பதிவாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல்

 சார் பதிவாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல்

விழுப்புரம்: தமிழ்நாடு சார் பதிவாளர் சங்க நிர்வாகிகளுக்கான 2025-28ம் ஆண்டிற்கான தேர்தல் விழுப்புரம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்தது. தேர்தலையொட்டி, கடந்த 29, 30ம் தேதிகளில் வேட் பு மனுக்கள் பெறப்பட்டது. 7 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து, அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டது. இதில், ச ங்க மாநில தலைவராக மகேஷ் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டார். பொது செயலாளர் மணிராஜ், பொருளாளர் பசுபதி, துணைத் தலைவர்கள் (நகரம்) சுகன்யா, ஆனந்தராணி (புறநகர்), இணைச் செயலாளர் சத்யபிரியா, அமைப்பு செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு, தேர்வு சான்றை தேர்தல் ஆணையாளர் ஜெயக்குமார் வழங்கினார். முன்னாள் மாநில நிர்வாகிகள் உதயசூரியன், அமைச்சு பணியாளர் சங்க முன்னாள் நிர்வாகி சடகோபன், சார் பதிவாளர்கள் இளங்கோவன், மணி, ஷோபனா, மல்லிகா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை