வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு படிவம் வழங்கல்
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த வினாயகபுரத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வானுார் தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியத்தில் வினாயகபுரம், பள்ளிச்சேரி கொத்தாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவங்களை பி.எல்.ஓ., அரசு அலுவலர்கள் வழங்கினர். இதனை வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி பார்வையிட்டார். நிகழ்ச்சியின்போது கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ், ஒன்றிய அவைத் தலைவர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் நித்யகல்யாணி ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் செல்வி சுந்தரமூர்த்தி, ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் சண்முகம், கிளைச் செயலாளர்கள் ராஜா,, தனஞ்செழியன், முன்னாள் ஊராட்சி செயலாளர் குமார், கிளைச் செயலாளர் ஆறுமுகம், பூத் கமிட்டி செயலாளர் நித்யானந்தம், மேலவை பிரதிநிதி லட்சுமணன், மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.