மேலும் செய்திகள்
வேளாண் கூடுதல் இயக்குநர் ஆய்வு
16-Oct-2024
வானூர், : தைலாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்குதேனீப் பெட்டிகள் வழங்கப் பட்டது.தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம் பாட்டு இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் தைலாபுரம் கிராமத்தில் 20 ெஹக்டர் ் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கிரா மத்தில் உள்ள 20 விவசாயி களுக்கு தேனீ பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், வேளாண்மை உதவி இயக்குநர் எத் திராஜ் பங்கேற்று, விவசா யிகளுக்கு தேனீப் பெட்டிகளை வழங்கினார். தேனீக்களால் பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்று மகசூல் பன்மடங்கு அதிகரிக்கின்றது.இதனால் தேனீக்கள் உழவரின் நண்பன் என்றும் வேளாண் தேவதை என்றும் அழைக்கப்படுகிறது. ஏக்கருக்கு 5 இந்திய தேனீ பெட்டிகளை வைப்பதன் மூலம் பல பயிர்களில் 20 முதல் 80 சதவீதம் மகசூல் அதிகரிக்கும் என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலு வலர்கள் ரேகா, தங்கம் உள்ளி்டடவர்கள் கலந்து கொண்டனர்.
16-Oct-2024