உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.சி., ஒன்றிய செயலாளர் இடைநீக்கம்

வி.சி., ஒன்றிய செயலாளர் இடைநீக்கம்

செஞ்சி: வி.சி., கட்சி ஒன்றிய செயலாளர் 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.வி.சி., கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் தனஞ்செழியன் அறிக்கை:செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராமன் கடந்த 6 மாத காலமாக தலைமை அறிவித்த எந்த கட்சிப் பணியும் செய்யாமல், தலைவர் போன்று தன்னிச்சையாக பொறுப்புகளை அறிவித்தும், தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். மேலும், குழு அரசியலை ஊக்கப்படுத்தி கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதால் ஆறு மாத காலம் தற்காலிகமாக ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுகிறார்.அவரிடம் கட்சி நிர்வாகிகள் யாரும் கட்சி ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை