உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியர் கைது

செஞ்சி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 59; மேல்மலையனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார்.மாணவியின் தந்தை நேற்று செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, ஆசிரியர் சேகரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை