உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு: 5,604 பேர் பங்கேற்பு

 விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு: 5,604 பேர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் 5,604 பேர் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதினர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 79 மாற்றுத் திறனாளிகள் உட்பட 2,389 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில் 2,056 பேர் எழுதினர். 333 பேர் பங்கேற்கவில்லை. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முதல் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வு மையத்தை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சி.இ.ஓ., கார்த்திகா உடனிருந்தார். ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வு இன்று நடக்கிறது. விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் 4,001 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில், 3,548 பேர் தேர்வெழுதினர். 453 பேர் ஆப்சென்ட். மற்ற தேர்வர்களை விட மாற்றத்திறனாளி தேர்வர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒருமணி நேரம் அனுமதி வழங்கப்பட்டு, மதியம் 2:00 மணி வரை தேர்வு நடந்தது. இந்த தேர்வு பணிகளில் முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள், தேர்வுக்கூட அலுவலர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இன்று 16ம் தேதி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 தேர்வு நடக்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் 5,604 பேர் தேர்வு எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ