ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு
விழுப்புரம் : தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோலியனுார் வட்டார கிளை சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழுப்புரத்தில் நடந்த விழாவிற்கு, வட்டார தலைவர் செபாஸ்டின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயானந்தம் வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் கதிர்வேல், துணைச் செயலாளர் சேகர், வட்டார மகளிரணி செயலாளர் ஜெயந்திமாலா முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் லட்சுமிபதி சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் தாஸ், பணி நிறைவு பெற்ற 26 ஆசிரியர்களின் பணியை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். மாநில பொருளாளர் தியாகராஜன், மகளிரணி செயலாளர்கள் கிருஷ்ணகுமாரி, சண்முக வடிவு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். வட்டார பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.