உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயிலில் தவறி விழுந்த வாலிபர் மரணம்

ரயிலில் தவறி விழுந்த வாலிபர் மரணம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் ரயில்வே கேட்டருகே நேற்று காலை 8.00 மணிக்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிணமாக கிடந்த வாலிபரின் சட்டை பையில் காரைக்குடி - சென்னைக்கு பயணிப்பதற்கான பயணச்சீட்டு இருந்தது. இதனடிப்படையில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் பயணித்த போது, படியில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி