உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டணும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டணும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

திண்டிவனம்: 'தமிழகத்தில் கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி மற்றும் துணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். நிர்வகிக்கும் அதிகாரத்தை, காவரி மேலாண்மை வாரியத்திற்கு வழங்குவது தான், காவரி சிக்கலுக்கு நிரந்தர தீர்வாகும். எனவே, காவரி மேலாண்மை வாரியத்திற்கு அதிகாரத்தை வழங்கும், வகையில் ஐகோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jgatovhy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

3 ஆண்டு சிறை

தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதை தவிர ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளின் கீழ் குறைந்தது நான்கு அல்லது ஐந்து சந்து கடைகள் இயங்கி வருகிறது. இது சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுக்கடைகளாகும். தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்த மதுவிலக்கு திருத்த சட்டத்தின் கீழ், இது மாதிரி உரிமம் இல்லாத இடங்களில் மதுவை விற்பனை செய்பவருக்கு, ஒராண்டு முதல் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அரசு கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகம் நடந்து வருவது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், கவர்னரும் தங்களுக்குள்ள மோதலை கைவிட்டு, காலியாக உள்ள பல்லைக்கழகங்களுக்கு துணை வேந்தரை நியமிக்க வேண்டும். துணை முதல்வராக உதயநிதியை நியமிப்பது என்பது, அவர்கள் கட்சி சார்ந்த விஷயம். அதை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழகத்தில் நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
ஜூலை 18, 2024 17:29

அரசியல் வாதிகளுக்கு கூலிப்படை இல்லாமல் எப்படி காரியம் நடக்கும்?? 2 நீட் தேர்வு வேண்டாம் என்றால் இன்னொரு பீட் கேட் என்று ஏதோ ஒரு தேர்வை வைத்து தானே லட்சக்கணக்கான மாணவர்களிலிருந்து தேர்வில் நல்ல மார்க் வாங்கியவர்களை செலக்ட் செய்ய முடியும்??? 3 உதயநிதி துணை முதலமைச்சர் ஆவது அவர்கள் விருப்பம். அதாவது சொத்தையோ சொள்ளயோ அறிவிலியோ என் பைய்யன் என்றால் எல்லாம் ஓகே அப்படித்தானே


Narayanan
ஜூலை 18, 2024 16:50

நீங்கள் ஒரு மருத்துவர் . நீங்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வது மாபெரும் தவறு . தேர்வே இல்லாமல் படிக்க வைத்தால் பயங்கர உருப்படாத தலைமுறை உருவாகும் . அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசிடம் வந்தால் வேண்டுமானால் நீட் தேர்வை நீக்க சிந்திக்கலாம் . ஆனால் நீக்குவது தவறு . படித்தவர் இப்படி சொல்ல கூடாது.


ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 17:21

அவர் எப்படி மருத்துவ இடம் பெற்றார் என்பதை விசாரியுங்கள். விளங்கும்.


Narayanan
ஜூலை 18, 2024 16:43

அது எப்படி ? கூலிப்படைஒழிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள் . நடக்கிற காரியமா ஏதாவது சொல்லுங்கள்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை