123 ஆண்டு பழமை வாய்ந்த நேஷ்னல் மேல்நிலைப் பள்ளி திண்டிவனம் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று சாதனை
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் பள்ளி என்ற பெயரை பெற்றது நேஷ்னல் மேல்நிலைப்பள்ளி. கடந்த 1902ம் ஆண்டு ஆரம்ப பள்ளியாக துவங்கப்பட்டது. இதன் மூலம் பள்ளி துவங்கி 123 ஆண்டுகள் ஆகிறது.நகரத்தின் மையப்பகுதியில், காந்தி சிலை அருகே திருவள்ளுவர் வீதியில் பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், சுற்றுப்புற மாணவர்கள் அதிகளவில் கல்வி பயின்று வருகின்றனர்.இருபாலர்கள் படித்து வரும் இந்த பள்ளி, 1962ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது 2000 மாணவ, மாணவியர் படித்து வந்தனர், 1980ம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்தது.திண்டிவனம் பகுதியில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் துவங்கிவிட்ட நிலையில், தற்போது, 1300 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளி நகரின் மையப்பகுதியில் உள்ளதால், நகரத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்து பயில்கின்றனர்.அரசு நிதியுதவி பெறும் இந்த பள்ளியில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர்.பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் மாநில மற்றும் தேசிய அளவில் உயர் பதவியில் உள்ளனர். இப்பள்ளியில் படித்த சசிக்குமார் என்ற மாணவர், பெங்களூருவில் உள்ள இஸ்ரோவில் விஞ்ஞானியாக உள்ளார். பள்ளியை சேர்ந்த மாணவர்கள் விளையாட்டு போட்டியில், தேசிய, மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளனர் . மாநில அளவில் ஹாக்கி, எறிபந்து, தேக்வோண்டோ, ஜூடோ, நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் குமாரதேவன், ரவிசங்கர், ஷீலாதேவி ஆகியோர் மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர்.கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பில் 99.5 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் 99 சதவீதமும் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.பள்ளியின் நிர்வாகக்குழு தலைவர் பி.ஆர்.எஸ்.ரங்கமன்னார், செயலாளர் ராம்டெக்ஸ் வெங்கடேசன், பொருளாளர் கே.எஸ்.பி.தினகரன், உறுப்பினர்கள் தியாகராஜன், உறுப்பினர்கள் வழக்கறிஞர் புருேஷாத்தமன், பாலாஜி ஆகியோர்களைக் கொண்ட குழுவினர் பள்ளியை சிறப்பாக வழி நடத்தி, மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.வெங்கடேசன்,பள்ளி செயலாளர்,
தனியார் பள்ளிக்கு நிகர்...
திண்டிவனத்தில் 123 ஆண்டு பழைமை வாய்ந்த பள்ளியாக நேஷ்னல் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பாரம்பரியமிக்கவர்களால் இந்த பள்ளி நிர்வகிக்கப்படுவதால், பள்ளியின் தேர்ச்சி சதவீதம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உள்ளது. ஒழுக்கம், கட்டுப்பாடு என அனைத்தும் மாணவர்களின் கல்வியுடன் போதிக்கப்படுவதால், பெற்றோர்கள் நம்பிக்கை வைத்து இந்த பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கின்றனர். இந்த பள்ளியில் படித்த பலர் நல்ல நிலையில் உள்ளது எங்கள் பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளது.-ரங்கமன்னார்,பள்ளி தலைவர்.
கல்வியுடன் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை
திண்டிவனத்தில் நுாற்றாண்டைக் கடந்து நகர மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது இந்த பள்ளியில் படிப்பதை நகர மாணவர்கள் பெருமை அடைகின்றனர். பள்ளியில் கல்வியுடன், ஒழுக்கத்தை பேணி காப்பதில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. நகரத்தைச் சேர்ந்த பலர் இந்த பள்ளியில் படித்து, பல்வேறு உயர்பதவிகளுக்கு சென்று, பள்ளிக்கு பெருமையை தேடிதந்துள்ளனர். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகள் இந்த பள்ளியில் சேர்ந்து படித்து வருவது, நிர்வாகக்குழு சார்பில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். -சரவணன்,9வது வார்டு கவுன்சிலர்.
அர்ப்பணிப்புடன் பணி
திண்டிவனத்தில் பெருமை வாய்ந்த நேஷ்னல் மேல்நிலைப்பள்ளியில், ஏழை, நடுத்தர மக்கள் அதிகளவில் பயின்று, வாழ்க்கயைில் நல்ல நிலையில் உயர்ந்து வருவது பாராட்டுக்குரியது. இப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அப்பணிப்புடன் பணியாற்றுவதால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமையைத் தேடி தருகின்றனர். இதனால், இப்பள்ளி மக்கள் மத்தியில் புகழுடன் விளங்குகிறது. இன்னும் இப்பள்ளி மேன்மேலும் புகழ்பெற எனது வார்டு மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.