வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவிங்கள்ளாம் மனுச ஜன்மங்களான்னு கேக்கத் தோணுது.
வி ழுப்புரம் நகரில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் முன் டிஜிட்டர் பேனர் கலாசாரத்திற்கு காவல் துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்துள்ளது. ஆனால், மாவட்டத்தில் இதை எந்த அரசியல் கட்சியோ, தனி நபர்களோ பின்பற்றுவதில்லை. விழுப்புரம் நகர பகுதியில் நான்குமுனை சிக்னலில் உள்ள இரண்டு பயணிகள் நிழற்குடை, புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடை, மாம்பழப்பட்டு ரோடு, கலெக்டர் அலுவலகம் எதிரில், ரயில் நிலையம் நுழைவு வாயில் பகுதிகளில் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர் வைத்து வருகின்றனர். நிழற்குடைகளில் பேனர்களை ஒட்டுவதால் அடிக்கடி அரசியல் கட்சியினரிடையே தகராறு ஏற்படுகிறது. இது தொடர்பாக கடந்த 4ம் தேதி காவல்துறை சார்பில் விழுப்புரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ரயில் நிலையம் நுழைவு வாயில், நான்குமுனை சிக்னல் நிழற்குடைகள், சிக்னல் வளைவு பகுதி, கலெக்டர் அலுவலகம் எதிரில், புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள நிழற்குடை ஆகியவற்றில் டிஜிட்டல் பேனர் வைக்க காவல் துறையினர் தடை விதித்தனர். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் வருகையையொட்டி கடந்த 15ம் தேதி வரை அரசியல் கட்சியினர் அவகாசம் கேட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி வழங்கினர். இதை தொடர்ந்து 15ம் தேதி முடிந்தவுடன், நேற்று முன்தினம் 20ம் தேதி பா.ம.க., ஆர்ப்பாட்டத்திற்கு பேனர் வைக்க அனுமதி வழங்கினர். பா.ம.க., ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் சிலர், புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடையில் ஒட்டியிருந்த தி.மு.க., டிஜிட் டல் பேனரை கிழித்தனர். இதனால், அங்கு சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவியது. எனவே, விழுப்புரத்தில் டிஜிட்டல் பேனர் வைக்க தடை விதிக்க காவல்துறை, கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவிங்கள்ளாம் மனுச ஜன்மங்களான்னு கேக்கத் தோணுது.