| ADDED : நவ 26, 2025 08:10 AM
வானுார்: துருவை கிராமத்தில் இருந்து புளிச்சபள்ளம் செல்லும் சாலை ஜல்லிகள் பெயர்ந்து படுமோசமானதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வானுார் அடுத்த துருவை கிராமத்தில் இருந்து புளிச்சபள்ளம் மற்றும் திண்டிவனம் பகுதிக்குச் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை சஞ்சீவி நகர், ஆலங்குப்பம், புதுநகர், துருவை, ஒட் டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்துகின்றனர். ஒழிந்தியாப்பட்டு, நைனார்பாளையம், காட்ராம்பாக்கம், கிளியனுார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ஆரோவில் செல்லவும் பயன்படுத்து கின்றனர். இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களும் அதிகளவில் வந்து செல்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக படுமோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை காலங்களில் மெகா சைஸ் பள்ளங்களில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக துருவையிலிருந்து கொய்யாதோப்பு வரை ஒன்றரை கிலோ மீட்டர் துாரத்திற்கு போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் சாலை உள்ளது. சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் ந டவடிக்கை எடுக்க வேண்டும்.