உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் தொகுதிக்கு குறி வைத்து நிதியை வாரி வழங்கும் மாஜி; இனி என்னோட ஏரியா... உள்ள வராதே...

மயிலம் தொகுதிக்கு குறி வைத்து நிதியை வாரி வழங்கும் மாஜி; இனி என்னோட ஏரியா... உள்ள வராதே...

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக தனி ஆவர்த்தனம் செய்து வருபவர் சண்முகம். பிற மாவட்டங்களில் 2 ச ட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என பொதுச்செயலாளர் பழனிசாமி பிரித்துள்ளார். ஆனால், 6 சட்டசபை தொகுதி உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு சவால் விடும் வகையில் ஒன்மேன் ஆர்மியாக சண்முகம் ஒருவரே பலம் பொருந்திய மாவட்ட செயலாளராக கோலோச்சி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அ.தி.மு.க.,விலிருந்து கடைசி நேரத்தில் தி.மு.க.,விற்கு தாவிய லட்சுமணனிடம் தோல்வியை தழுவியர் சண்முகம். கட்சியில் தனக்குள்ள பலம், செல்வாக்கால், அ.தி.மு.க.,வில் ராஜ்யசபா எம்.பி., பதவியை பெற்றார். வரும் சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் நின்றால் மீண்டும் சிக்கல் ஏற்படலாம் என்பதால், தனது சொந்த ஊரான அவ்வையார்குப்பம் கிராமம் உள்ள மயிலம் சட்டசபை தொகுதியில் நின்று வெற்றி வாகை சூடலாம் என்று கணக்கு போட்டு, தொகுதிக்கு தேவையான உதவிகளை கச்சிதாக செய்து வருகிறார். எம்.பி., நிதியை சண்முகம் தமிழ்நாட்டில் உள்ள எந்த தொகுதிக்கும் பகிர்ந்து கொடுக்கலாம். ஆனால் இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாயை மயிலம் சட்டசபை தொகுதியில் உள்ள கிராமங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் 3 கோடி ரூபாய் நிதியை மயிலம் தொகுதியில் 135 கிராம ஊராட்சிகளுக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் துவங்கி, கிளைச் செயலாளர் வரை 2 லட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாய் வரை பணிகளை ஒதுக்குவதற்கான ஆர்டரை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கியுள்ளார். இதனால் கட்சியில் உள்ள கிளைச் செயலாளர், ஒன்றிய செயலாளர் என அனைரையும் சண்முகம் ஒரே சமயத்தில் குஷிப்படுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி, கிராமத்தில் உள் ள இளைஞர்களைக் கவரும் வகையில் 8 இடங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி லட்சக்கணக்கான ரூபாய்க்கு பரிசுகளை வழங்கியும், விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் கிட் டுகளையும் வழங்கியுள்ளார். மயிலம் தொகுதி முழுதும் சண்முகம் எம்.பி.,நிதியை வாரி வழங்கி தன்னுடைய வெற்றிக்கு அடிக்கல் நாட்டி வருவதால், ஆளுங்கட்சி சார்பில் பலர் சண்முகத்தை எதிர்த்து கட்சியில் சீட் கேட்பதற்கு தயங்கும் நிலையை சண்முகம் மறைமுகமாக உருவாக்கிவிட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை