உள்ளூர் செய்திகள்

மோட்ச தீபம்

திண்டிவனம் : பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, இந்து மக்கள் கட்சி சார்பில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திண்டிவனத்தில் நடந்தது.காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இந்து மக்கள் கட்சியின் ஆன்மிகப்பேரவை சார்பில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, ஆன்மிகப்பேரவை மாநில தலைவர் சக்திவேல், மாவட்ட தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் ஜெகதீஸ்வரன், செந்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ