உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எஸ்.ஐ.,யை வெட்ட முயன்றவர் கைது

எஸ்.ஐ.,யை வெட்ட முயன்றவர் கைது

வானுார், ஜன. 22-ஆரோவில் அருகே சப் இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஆரோவில் - குயிலாப்பாளையம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.திடீரென அந்த நபர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சோதனை செய்த சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை வெட்ட முயன்றார். வெட்டு விழாமல் தப்பித்த சப் இன்ஸ்பெக்டர் அந்த நபரை பிடித்து முறையாக கவனித்து விசாரித்தனர்.அதில், அவர் குயிலாப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் வெங்கடாஜலபதி, 23; என்பது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து வானுார் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் வரலட்சுமி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.வெங்கடாஜலபதியை 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி