உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருச்சி-சென்னை சாலையில் வாகனங்கள் அணிவகுப்பு பைபாசில் நெரிசலை கட்டுப்படுத்திய போலீசார்

திருச்சி-சென்னை சாலையில் வாகனங்கள் அணிவகுப்பு பைபாசில் நெரிசலை கட்டுப்படுத்திய போலீசார்

விழுப்புரம்: திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையில் நேற்று வாகனங்கள் அதிகரித்ததால், விழுப்புரம் பைபாசில் மாற்று சாலையில் திருப்பிவிட்டு போலீசார் நெரிசலை கட்டுப்படுத்தினர்.தமிழகத்தில் பொங்கல் விழாவையொட்டி , சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்தனர். அவர்கள் பலர் நேற்று மீண்டும் சென்னைக்கு திரும்பினர். இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.இதனால், விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பைபாசில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரவுண்டானா பாலம் பகுதியில் பிரியும் குறுகளான பாதையில், வழக்கம் போல் வாகனங்கள் அதிகரிப்பால் நேற்று போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டது.விழுப்புரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் நேற்று பிற்பகல் 11 மணி முதல் அங்கு வந்து, திருச்சி-சென்னை மார்க்க வாகனங்களை இரு வழிபாதையாக திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜானகிரபும் புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடப்பதால், திருச்சி மார்கத்தில் இருந்து வரும் வாகனங்களை, பஸ், கனரக வாகனங்கள் புதிய பாலத்தின் மேல் வழியாகவும், இலகு ரக வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாகவும் திருப்பிவிட்டனர். இதே போல், விழுப்புரம், புதுச்சேரி மார்க்க வானங்கள் பாலத்தின் கீழ் பகுதியாக வந்து செல்லவும் தற்காலிக பேரி கார்டுகள் போட்டு திருப்பிவிட்டனர்.விழுப்புரம் பைபாஸ் வழியாக நேற்று பிற்பகல் 12 மணி முதல் சென்னை திருச்சி நான்கு வழிச்சாலையில் அதிகளவில் வானங்கள் அணிவகுத்து சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ