உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றின் தடுப்பு சுவர் சரிந்தது

கிணற்றின் தடுப்பு சுவர் சரிந்தது

திண்டிவனம் : திண்டிவனம் அய்யந்தோப்பில் சாலையோரம் உள்ள விவசாய கிணற்றின் சுற்றுச்சுவர் உள்வாங்கியதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.திண்டிவனம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக, திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியில் கல்லுாரி செல்லும் சாலையோரம் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய தரைக்கிணற்றின் சுற்றுச்சுவர் நேற்று காலை 8:00 மணியளவில் திடீரென்று உள்வாங்கியது.இதனால் சாலையின் ஒரு பகுதி சரிந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக பாதிக்கப்பட்ட இடத்தில் டிரம்களை வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இருப்பினும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். இரவு நேரங்களில் பெரும் விபத்து ஏற்படும் முன் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ