உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புயலால் ஒத்திவைத்த அரையாண்டு தேர்வு துவக்கம்

புயலால் ஒத்திவைத்த அரையாண்டு தேர்வு துவக்கம்

விழுப்புரம்,: விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் ஒத்திவைத்த அரையாண்டு தேர்வுகள் நேற்று நடந்தது.தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு கடந்த டிச., 9ம் தேதி முதல் 23ம் தேதிவரை நடந்தது. தொடர்ந்து 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதிவரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் இந்த தேர்வு நடக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து நேற்று அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. விடுமுறையை கழித்த மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் ஒத்திவைத்த அரையாண்டு தேர்வுகள் நேற்று முதல் துவங்கியது. இந்த தேர்வு வரும் 10 ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை