| ADDED : ஜன 03, 2024 12:05 AM
வானுார் : ஆரோவில் அருகே நாய் மீது மோதி ஸ்கூட்டரில் இருந்து விழுந்தவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆரோவில் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 47; வாடகை பாத்திர நிலையம் வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் சிவரத்தினம் என்பவருடன், நாவற்குளத்திற்கு, ஸ்கூட்டரில் அமர்ந்து சென்றார்.நாவற்குளம் சர்வீஸ் ரோட்டில் சென்றபோது, குறுக்கே வந்த நாய் மீது ஸ்கூட்டர் மோதியதில் நிலை தடுமாறியதில், பின்னால் அமர்ந்து சென்ற முருகன் கீழே விழுந்தார்.தலையில் பலத்த காயமடைந்த முருகன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.விபத்து குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.