உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேய்பிறை அஷ்டமி பூஜை

தேய்பிறை அஷ்டமி பூஜை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, செவ்வரளி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை நடந்தது. பூஜை மற்றும் அபிஷேகங்களை ரவி குருக்கள் தலைமையில் வேதாத்திரி குருக்கள் செய்திருந்தார்.பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !