உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் வழிப்பறி; 3 பேருக்கு போலீஸ் வலை

திண்டிவனத்தில் வழிப்பறி; 3 பேருக்கு போலீஸ் வலை

திண்டிவனம் : திண்டிவனத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமானுஜம், 39; விவசாயி. இவர், இரண்டு தினங்களுக்கு முன், திண்டிவனம் உழவர்சந்தை அருகே உள்ள செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் வந்தபோது, திண்டிவனம் ரோஷணை பகுதியைச் சேர்ந்த கிடங்கலான் என்கிற சரண்ராஜ், 38; மற்றும் 2 பேர் சேர்ந்து ராமானுஜத்தை இரும்பு ராடால் தாக்கி, அவரிடமிருந்து மொபைல் போன் மற்றும் டிஸ்கவர் பைக்கையும் பறித்துச் சென்றனர்.தாக்குதலில் காயமடைந்த ராமானுஜம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து ராமானுஜம் கொடுத்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து, சரண்ராஜ் உட்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்