உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் தொரவி ஊராட்சி தலைவர் சங்கர் உறுதி

அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் தொரவி ஊராட்சி தலைவர் சங்கர் உறுதி

விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன் என தலைவர் சங்கர் உறுதியளித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:முன்னாள் அமைச்சர் பொன்முடி, புகழேந்தி எம்.எல்.ஏ., ஆகியோரின் பரிந்துரையின் பேரில் டி பனப்பாக்கத்தில் ஆற்றில் தண்ணீர் செல்லும்போது பிரெஞ்சு வாய்க்காலை கடந்து இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் வகையில் 42 லட்சம் ரூபாய் மதிப்பில் மினி பாலம் கட்டப்பட உள்ளது.அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைத்திட ஜல்ஜீவன் திட்டத்தில் டி.பனப்பாக்கத்தில் 13 லட்சம் ரூபாயிலும், தொரவியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலும் பைப் லைன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.அண்ணா மறுமலர்ச்சி சிறப்பு திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் தொரவியில் கிளை நூலகம் புனரமைப்பு பணி செய்யப் பட்டுள்ளது. மந்தக்கரை பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க 3 லட்சம் மதிப்பில் மழைநீர் சேகரிப்பு தொட்டி, காலனி பகுதியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.தொரவியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 4.70 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டுள்ளது. அயோத்திதாஸ் திட்டத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலும், பாரதி நகரில் 7 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை வசதி செய்யப்பட உள்ளது.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வீரபத்திரன் கோவில் அருகில் குளம் துார்வாரப்பட்டுள்ளது. பாரதி நகரில் குடிநீர் வசதிக்காக ஏரிக்கரை பகுதியில் இருந்து 8.30 லட்சம் ரூபாய் மதிப்பில் பைப்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது தொரவி காலனியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 மினி டேங்க் வசதியும், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் 50 வீடுகளுக்கு தனி நபர் தண்ணீர் உறுஞ்சும் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது.வரும் காலங்களில் தொரவி கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசிடம் இருந்து கேட்டு பெற்று நிறைவேற்றுவேன்.இவ்வாறு ஊராட்சி தலைவர் சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை