உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுனர் உட்பட மூவர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுனர் உட்பட மூவர் காயம்

மயிலம்: மயிலம் அருகே நடந்து சென்றவர் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட இருவர் காயமடைந்தனர்.கூட்டேரிப்பட்டில் இருந்து மயிலத்திற்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை கூட்டேரிப்பட்டு பால்பாண்டியன் என்பவர் ஓட்டிச் சென்றார். எடப்பாளையம் அருகே நடந்து சென்ற பொம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சாம்பசிவன் மகன் ராஜன் 35; மீது எதிர்பாராத விதமாக மோதி, ஆட்டோ கவிழ்ந்தது.இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த உளுந்துார்பேட்டை சேர்ந்த தங்கமணி 54; காயமடைந்தார். விபத்தில் காயமடைந்த இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். டிரைவர் பால்பாண்டியன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி