| ADDED : நவ 26, 2025 08:10 AM
திண்டிவனம்: திண்டிவனம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும் என மஸ்தான் எம்.எல்.ஏ., தெரிவித்தார். திண்டிவனம் நகராட்சி இந்திர காந்தி பஸ் நிலைய பழைய கட்டடங்கள் இடித்து, ரூ.4.23 கோடி மதிப்பில் புதிய தினசரி அங்காடி கட்டும் நடந்து வருகின்றது. பஸ் நிலையத்தில் நடக்கும் பணிகளை மஸ்தான் எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பஸ் நிலையம் எதிரில், சாலையில் பஸ்கள் வந்து திரும்பி செல்ல இடம் ஒதுக்கி தருமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது மஸ்தான் எம்.எல்.ஏ., கூறுகையில்; பஸ் நிலையத்தில் பணிகள் முடிந்த பிறகு அனைத்து பஸ்களும் உள்ளே வந்து செல்லும். புதியதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி பஸ் நிலைய பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் 10 நாட்களில் திறப்பு விழா குறித்து அறிவிக்கப்படும். புதிய பஸ் நிலையம் திறந்தாலும், தற்போதுள்ள நகராட்சி பஸ் நிலையத்திற்கு வழக்கம் போல பஸ்கள் வந்து செல்லும் என கூறினார். ஆய்வின் போது, நகர தி.மு.க., செயலாளர் கண்ணன், முன்னாள் நகர செயலாளர் கபிலன் உட்பட பலர் உடனிருந்தனர்.