உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திண்டிவனம், : திண்டிவனத்தில், தமிழ்ச்சங்கம் சார்பில், கவியரங்கம், சொல்லரங்கம், குறளரங்கம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மயிலம் தமிழ்க் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை வரவேற்றார். திண்டிவனம் தமிழ்ச் சங்கத் தலைவர் துரை ராஜமாணிக்கம் நோக்க உரையாற்றினார்.விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு, மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் விருது வழங்கி பேசினார்.விழாவில், தமிழ் எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் விக்கிரமன், பாங்கை காமராஜ், தமிழ்ச்சங்க துணைத் தலைவர் ராமலிங்கம், கன்னிகாபரமேஸ்வரி பள்ளி தலைமையாசிரியர் சுதர்சனன், ஆண்டாள் நாச்சியார் சபை பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்