மேலும் செய்திகள்
காங்., அழகிரி பிறந்தநாள் விழா
23-Oct-2024
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில், த.மா.கா., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.விழுப்புரம் காந்தி சிலை அருகே நடந்த முகாமிற்கு, த.மா.கா., மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கி, உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி வைத்து, உறுப்பினர் படிவத்தை வழங்கினார்.அப்போது அவர் கூறுகையில், 'சட்டசபை தொகுதிக்கு 2000 உறுப்பினர்களை சேர்க்கும் வகையில், விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கைப் நடைபெற்று வருகிறது. விழுப்புரம், வளவனுார், முண்டியம்பாக்கம், ராதாபுரம், முட்டத்துார் ஆகிய பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது' என்றார்.முகாமில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் வேல்முருகன், மாநில செயலாளர் வளவனுார் ஜெயபால், விழுப்புரம் நகர தலைவர் ஹரிபாபு, மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர், செயலாளர் தினேஷ், வட்டார தலைவர்கள் பரந்தாமன், பழனி, முருகன், மாவட்ட எஸ்.சி., - எஸ்.டி. பிரிவு தலைவர் நடராஜன், மாநில பொதுச்செயலாளர் செந்தில், இளைஞரணி தலைவர் வெங்கடேஷ், மகளிரணி தலைவர் வேல்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.
23-Oct-2024