டி.என்.பி.எஸ்.சி., தேர்வு : 1,481 பேர் ஆப்சென்ட்
விழுப்புரம்; மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் குடிமை பணிகளுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி, வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளி, அக்ஷார்தம் சென்ட்ரல் பள்ளி ஆகிய ஐந்து மையங்களில் நடந்தது. அங்கு 3,027 தேர்வர்கள் தேர்வெழுதுவதற்காக ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. நேற்று காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை ஓ.எம்.ஆர்., ஷீட் தேர்வும், மதியம் 2:30 மணி முதல் மாலை5:30 மணி வரை மொழிபெயர்ப்பு மற்றும் துல்லியமான எழுத்து (விளக்க வகை) தேர்வும் நடந்தது. இந்த தேர்வை, 1,546 எழுதினர். இதில், 1,481 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தொடர்ந்து, இன்று மொழிபெயர்ப்பு, விளக்கவகை தேர்வு நடக்கிறது.