மேலும் செய்திகள்
உழவர் நலத்துறை முகாம் கண்துடைப்பா?
13-Jul-2025
விழுப்புரம்; விழுப்புரத்தில் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் தாலுகா அலுவலக கூட்டரங்கில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் விவசாய பிரதிநிதிகள் கலிவரதன், முருகேசன் உள்ளிட்டோர் பேசினர். அவர்கள் 'கலெக்டர் அலுவலகத்தில் நாளை மாவட்ட அளவிலான விவசாய கூட்டம் நடக்க உள்ளது. அதற்கு ஒரு நாளிற்கு முன்பு, கோட்ட அளவிலான கூட்டம் பெயரளவில் நடத்துவது ஏன்? செவ்வாய் கிழமைகளில் தான் கூட்டம் நடத்துவது வாடிக்கை. வரைமுறையின்றி கூட்டத்தை நடத்துகின்றீர்கள். காலை 10:30 மணிக்கு கூட்டம் என கூறிவிட்டு, திடீரென மதியம் 12:00 மணிக்கு தொடங்கினால், எப்போது கூட்டத்தை முடிப்பது' என கேள்வி எழுப்பினர். அதற்கு அதிகாரிகள், நேரம் கிடைக்கும் போதுதான் கூட்டத்தை நடத்த முடியும் என பதில் அளித்தனர். இதனால், கோபமடைந்த விவசாயிகள், அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'விவசாயிகளை அலுவலர்கள் மதிப்பதில்லை. குறைதீர் கூட்டங்களுக்கு அனைத்து துறை அலுவலர்களும் வருவதில்லை. இன்று கூட பல துறை அலுவலர்கள் வரவில்லை. சம்பிரதாய அளவில் கூட்டம் நடத்துவதால், அதில் குறைகளை கூறி பயனில்லை என்பதால், வெளியே வந்துவிட்டோம்,' என்றனர்.
13-Jul-2025