உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கல் பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் டிராபிக் ஜாம்

பொங்கல் பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் டிராபிக் ஜாம்

விழுப்புரம் : பொங்கல் பண்டிகையையொட்டி, விழுப்புரத்தில் மஞ்சள் கிழங்கு, கரும்பு வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்ததால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.பொங்கல் பண்டிகை இன்று 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, விழுப்புரம் நகரில் பொதுமக்கள் நேற்று பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மார்கெட் பகுதிகளில் குவிந்தனர்.பொங்கல் பானையில் கட்டுவதற்காக மஞ்சள் கிழங்கு, கரும்புகள் மற்றும் பானைகளை வாங்க விழுப்புரம் எம்.ஜி., ரோடு, பாகர்ஷா வீதி மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இதனால், நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை