திண்டிவனத்தில் விதிமீறிய வாகன ஓட்டிகளால் நெரிசல்
திண்டிவனம்: திண்டிவனம் நேரு வீதியில் போலீசார் இல்லாததால், போக்குவரத்து விதிமீறிய வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதியடைந்தனர்.தீபத்திருவிழாவான நேற்று திண்டிவனத்தில் பிரதான சாலையான நேரு வீதியில் போக்குவரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் சென்ற நிலையில், போக்குவரத்து நெரிலை கட்டுப்படுத்த போலீசார் இல்லாததால் கடுமையாக போக்குவரத்து பாதித்து, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.இது மட்டுமின்றி, போக்குவரத்து போலீசார் இல்லாததால், விதிமுறை மீறி ஒரு வழிப்பாதையான நேரு வீதியில் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் வந்ததால் இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நீண்ட நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.