உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் மோதி பட்டதாரி வாலிபர் பலி திண்டிவனத்தில் சோகம்

அரசு பஸ் மோதி பட்டதாரி வாலிபர் பலி திண்டிவனத்தில் சோகம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் அரசு பஸ் மோதியதில் பைக்கில் சென்ற பட்டதாரி இறந்தார்.திண்டிவனம், கோட்டைமேடு, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் கோபால், 23; மயிலம் பவ்டா கல்லுாரியில் எம்.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார். படிப்பு நேரம் போக, திண்டிவனத்தில் உள்ள பேக்கரியில் பகுதி நேர பணி செய்து வந்துள்ளார்.இவர், நேற்று மாலை 4:45 மணியளவில், திண்டிவனம் மேம்பால பஸ் நிலையத்திலிருந்து, மயிலம் ரோட்டில் ஸ்பிளண்டர் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.டவுன் போலீஸ் நிலையம் எதிரில் நான்கு முனை சந்திப்பில் திரும்பியபோது, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் பஸ்சின் அடியில் பைக்குடன் சிக்கிய கோபால், 50 அடி துாரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கோபால் இறந்தார்.இந்நிலையில், விபத்து நடந்த அதே இடத்தில் பைக் மீது கார் மோதியதில் 2 பேர் காயமடைந்தனர்.உடனே அங்கிருந்த பொதுமக்கள், அந்த இடத்தில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல் செய்ய முயன்றனர். போலீசார் தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்தினர்.விபத்து குறித்து திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை